பிரதான செய்திகள்

கல்கிஸ்சை சம்பவம்! முன்னால் காவல்துறை ஒருவர் கைது

கல்கிஸ்ஸை சம்பவம் தொடர்பில் மஹவாத்துவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் இன்று (06) காலை கொழும்பு குற்றவியல் பிரிவில் சரணடைந்துள்ளதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய ப்ரகீத் சானக குணதிலக என்ற பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் , இவருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றில் தற்போதைய நிலையில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் , இரண்டு வழக்குகள் முஸ்லிம் பள்ளியொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலும் , மற்றைய வழக்கு பாணந்துறை மகளீர் பாடசாலையொன்றின் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலும் தொடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்

wpengine

கம்பளை நகர சபைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்! குப்பைகளை அகற்று

wpengine

எரிபொருள் தட்டுப்பாடு அமைச்சர்கள் விமானத்தில் பறக்க முடியாது.

wpengine