பிரதான செய்திகள்

கல்கிசையில் Golden Age பாலர் பாடசாலையின் விழா

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்கிசை Golden Age பாலர் பாடசாலை வருடா வருடம் நடாத்தி வரும் கலை விழா, இம்முறையும் நான்காவது தடவையாக  அண்மையில் தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பாலர் பாடசலையின் அதிபர் எம்.ஜே.எம். அஸீம் தலைமையிலும் தலைமை ஆசிரியர் பாத்திமா றெஹானா மௌலானாவின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்த விழாவில், ‘மௌலானா சன்ஸ்’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  செய்யத் எஸ். சியாம் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக பலீலுர் ரஹ்மான், அக்ரம் மௌலானா, இல்ஹாம் மௌலானா, மபாஹிர் மௌலானா, நௌஷாத் மௌலானா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பாலர் சிட்டுக்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில்மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள்  என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

இளம் பாராயத்திலிருந்தே கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்க நடைமுறைகளையும் மற்றும் ஆங்கிலமொழி மூலம் சிறுவயதிலிருந்தே சிறார்கள் கற்று சிறந்து விளங்கி முன்னணியில் திகழ்கின்றனர்.

சிறார்களை அன்பாக வழிநடாத்தி வரும் இப்பாலர் பாடசாலை, பிரதேசத்திலே முதலிடம் பெற்று அனைவரதும் பாராட்டைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

wpengine

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

Editor

புளுவேல் விளையாடிய பொறியியலாளர் தற்கொலை

wpengine