பிரதான செய்திகள்

கலைஞர்கள் ,ஊடகவியலாளர்கள் நீதவான் பதவி -விஜயதாஸ ராஜபக்‌ஷ

சமூகத்திற்கு உயர் சேவையாற்றிய கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.

சட்ட ஒழுங்கமைப்பு விதிகளின் கீழ் நீதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.

அதன்படி நாடு பூராகவும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 100 பேருக்கு எதிர்வரும் 13ம் திகதி நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவின் தலைமையில் சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேசத்தில் பெருமை சேர்த்த தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

Editor

கிளிநொச்சி இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா.!

Maash

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு

Maash