பிரதான செய்திகள்விளையாட்டு

கலாசாரத்தை காரணம் காட்டி தடை போடக் கூடாது – சானியா மிர்சா

விளையாட்டு போட்டிகளில் பெண்களின் வளர்ச்சி முக்கியமானது, கலாசாரத்தை காரணம் காட்டி தடை போடக் கூடாது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி மூன்று கிராண்ட்ஸ்லாம் உட்பட 41 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது புது அனுபவத்தை தந்தது.

வாழ்க்கையானலும் சரி, தொழிலானாலும் சரி சிறந்த துணை அமைவது மிகவும் முக்கியம்.

அந்த வகையில் மார்ட்டினா ஹிங்சுடன் இணைந்து விளையாடுவது ஊக்கத்தை அளிக்கிறது.

இருப்பினும் உலக சாதனையை எட்டும் முயற்சியில் தோல்வி அடைந்தது எதிர்பார்க்காத ஒன்று தான்.

விளையாட்டை பொறுத்த வரையில் வெற்றி, தோல்வி வருவது இயல்பு, வெற்றியின் போது உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும் நாம் தோல்வியின் போது அடுத்தடுத்த போட்டிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் பெண்களின் வளர்ச்சி முக்கியமான ஒன்று, கலாசாரத்தை காரணம் காட்டி வளர்ச்சிக்கு தடை போடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

யால  காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது! பல கொலையுடன் தொடர்பு

wpengine

மசூத் அசாரை தடை செய்ய அமெரிக்கா முயற்சி

wpengine

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine