பிரதான செய்திகள்

கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்காக கடற்தொழில் பிரதி அமைச்சரை சந்தித்த ஆஷிக்

ரஸ்மின்
கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், கடற்தொழில் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலியிடம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களுடனான விஷேட சந்திப்பொன்று கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற பேதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த சந்திப்பில் அ.இ.ம.கா தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக நீண்ட நேரம் பேசப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் அவர்களினால் கட்சியின் தலைவர் மற்றும் பிராந்திய அமைப்பாளரின் ஊடாக கட்சியின் தவிசாளரும், கடல் தொழில் மற்றும் கிராமியப்பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியிடம், கற்பிட்டி பிரதேச கடல்தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மீன்பிடி உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்போது, மண்ணண்ணெய் விலை உயர்வினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பிரதேச சபை உறுப்பினர் பிரதி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி, விரைவில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதேச சபை உறுப்பினர் ஆஷிகிடம் வாக்குறுதியளித்தார்.

Related posts

சவூதி வழங்கியுள்ள பேரீச்சம் பழம் ரமழானுக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்படும்

wpengine

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine

முஸ்லிம் குடியேற்றம் வில்பத்து மீதான அமைச்சர் றிஷாட்டின் வழக்கு பெப்ரவரி

wpengine