செய்திகள்பிரதான செய்திகள்

கனடாவில் இருந்து வந்து, பைசிகில் ஓடிய பெண் பட்டாரக வாகனம் மோதி பலி..!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

2700 மில்லியன் ரூபா சமுர்த்திப்பணம்! அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை -அமீர்அலி

wpengine

இணைந்த வட,கிழக்கில் மு.கா. போட்டியிட்டதன் மர்மம் என்ன?

wpengine

பிரதமரின் தேக சுகத்திற்கு இப்தார்! முன்வரிசையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பிராத்தியுங்கள்

wpengine