செய்திகள்பிரதான செய்திகள்

கந்தர, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

கந்தர, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் பின்தொடர்ந்த ஒரு குழு, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரைக் குறிவைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related posts

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine

பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது.

wpengine