உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்..!

உலகத்தின் 1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப்பாக இருந்த பிரான்சிஸ், கடந்த 12 ஆண்டுகளாக பல உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார்.

போப் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (இஸ்டர் நாளில்), சுதந்திர சிந்தனை மற்றும் மதச்சுதந்திரம் குறித்து வலியுறுத்தி உரையாற்றினார்.

பசிலிக்கா அரங்கின் பால்கனியில் இருந்து 35,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் இன்று காலமானார். அவரது இறப்பிற்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

Maash

ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்

wpengine

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை மெகபூபா முப்தி சந்தித்தார்

wpengine