பிரதான செய்திகள்

கதிர்காமம் தீர்த்தமான மாணிக்க கங்கைக்கான நுழைவாயில் நிர்மாணப்பணி இன்று தொடக்கி வைக்கப்பட்டது:

கதிர்காமம் பெரிய கோவில் தீர்த்தமான மாணிக்க கங்கைக்குரிய புதிய நுழைவாயில் சுவர் நிர்மாணப்பணிகளை இன்று நாங்கள் ஆரம்பித்து வைத்தோம்.

அமைச்சர்களான சமல் ராஜபக்க்ஷ, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ மற்றும் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர ஆகியோரும், இந்த நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் என்னோடு கலந்துகொண்டிருந்தனர்.

இதனையொட்டி – “சுரகிமு கங்கா” (நதிகளைக் காப்போம்) திட்டத்தின் கீழ், சுற்றாடல்துறை அமைச்சினால் உளவு இயந்திரம் ஒன்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனமொன்றும், கதிர்காமம் பெரிய கோவிலுக்கு எம்மால் அன்பளிபுச் செய்யப்பட்டது.

மாணிக்க கங்கையில் வீசப்படும் குப்பைகள் மற்றும் திண்மக் கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைத்திட்டமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர அவர்களிடம் இந்த வாகனங்களை நான் கையளித்தேன்.

சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்தநிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Related posts

விரைவில் நான்கு திமிங்கில அமைச்சர்கள் கைதுசெய்யப்படலாம்.

wpengine

ஜனாஸா எரிப்பு விடயத்தில், அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருக்கின்றது.

wpengine

புலிகளினால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பா.உ சாள்ஸ் எதிர்ப்பு

wpengine