பிரதான செய்திகள்

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், உப நிகழ்வு ஒன்றில் கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பல அமைப்புக்கள் சேர்ந்து உப நிகழ்வுகளை நடத்துகின்ற நிலையில் கண்டி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் நேற்றைய தினம் சிறப்பு அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது அதி உச்சமான அளவில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது, பார்த்துகொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பொலிஸ்துறை மீள் கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் முஸ்லிம்களின் இறைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா பிரதிநிதிகளிடம் இத்தருணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

USAID நிதி கோத்தபாயவை பதவியை விட்டு விரட்டவும் , ஓரினச் சேர்க்கையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டதா ?

Maash

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு ! வவுனியா மாணவனின் சாதனை !

Maash

கோத்தபாயவின் அரசியல் பயணம் இன்று

wpengine