பிரதான செய்திகள்

கண்டி ஜும்ஆப் பள்ளிவாசல் பணிகளை நிறுத்த வேண்டும் -ஆணையாளர் கடிதம்

கண்டி நகர மத்தியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரி கண்டி மாநகர சபை ஆணையாளர் அனுப்பியுள்ள கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பள்ளிவாசல் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள “சிங்கலே” அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பள்ளிவாசலில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் சட்ட விரோதம் என மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக “சிங்கலே” அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பள்ளிவாசலின் “மினரா” கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், கண்டி நகரில் அமைந்துள்ள பௌத்தர்களின் புனித தளமான தலதா மாளிகையை விட அது உயரமாக அமையும் எனத் தெரிவித்து கடும்போக்கு பெளத்த அமைப்பான “சிங்கலே” அமைப்பு பள்ளிவாசல் முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.025

கண்டி மாநகர சபை ஆணையாளரின் கடிதம் கிடைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

Related posts

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட! வீட்டு திட்ட பயனாளிகள்

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் ஆளுநர் .

Maash