கட்டுரைகள்பிரதான செய்திகள்

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

(எஸ்.றிபான்)

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு சம காலத்தில் புதிய அர­சியல் அமைப்பில் எவ்­வாறு தீர்வு அமைய வேண்­டு­மென்று முஸ்­லிம்கள் மத்­தியில் உள்ள அர­சியல் கட்­சிகள் தமது எதிர்­பார்ப்புக்களை  பற்றி குறிப்­பி­ட­வில்லை.

முஸ்லிம் கட்­சிகள் இனி ஒரு போதும் தமது எதிர் பார்க்­கை­களை வெளிப்­ப­டுத்­தாது என்று முஸ்லிம் சமூகம் நம்­பிக்கை இழந்­தி­ருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்­லாஹ்வின் தலை­மை­யி­லான தேசிய காங­கிரஸ் புதிய அர­சியல் அமைப்பில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வாக தமது எதிர்­பார்க்­கையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழுக்குப் போட்­ட­வரைப் போன்று அர­சியல் பற்றி எக்­க­ருத்­தையும் தெரி­விக்­கா­தி­ருந்தார். அவரைக் காண்­பது கூட அரி­தா­கவே இருந்­தது. இந்தப் பின்­ன­ணியில் கடந்த வாரம் தேசிய காங்­கி­ரஸின் தேசிய மாநாடு வழக்கம் போல் அக்­க­ரைப்­பற்றில் நடை­பெற்­றது. இம்­மா­நாட்டில் 12 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

* நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை தொடர வேண்டும்.

* தேர்­தல்கள் தற்­பொழுது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சார தேர்தல் முறையில் நடை­பெற வேண்டும்.

* இன, மத, மொழி அடிப்­ப­டையில் மக்கள் குழுக்­களை ஏற்­ப­டுத்தி வன்­மு­றை­களை தூண்டும்                பேச்­சுக்கள், நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

* கிழக்கு மாகாணம் வடக்கு மாகா­ணத்­துடன் இணைக்­கப்­படக் கூடாது.

* அரசு வடக்­குடன் கிழக்கை இணைக்க வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட மாகா­ணமும் அமையும் விதத்தில் மாகா­ணங்­களின் எல்­லைகள் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும்.

* சகல இனங்­களும் சம அந்­தஸ்­துடன் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான உத்­த­ர­வாதம் வழங்­கப்­பட வேண்டும்.

* அர­சி­னாலும், அமைச்­சர்­க­ளி­னாலும் மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் பழி­வாங்­கல்கள் நிறுத்­தப்­பட வேண்டும்.

* உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தல்­களை கால­தா­ம­தமின்றி உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு                       நட­வ­டி­க­்கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

* விடு­தலைப் புலி­க­ளி­னாலும், அர­சி­னாலும், ஏனைய அதி­கார சக்­தி­க­ளா­லும் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் விவ­சாய மற்றும் குடி­யி­ருப்புக் காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும்.

* வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து புலி­க­ளினால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களும், அவர்­களின் வம்­சா­வளி­யி­னரும் சொந்த இடங்­களில் குடி­யேற்­றப்­பட வேண்டும். அத்­தோடு அவர்­க­ளுக்­கு­ரிய உட்­கட்­ட­மைப்பு வச­தி­களும் செய்து கொடுக்­கப்­பட வேண்டும்.

* விடு­தலைப் புலி­க­ளி­னாலும், ஏனைய ஆயுதக் குழுக்­க­ளி­னாலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லைகள், சொத்­த­ழிப்­புக்கள், பொரு­ளா­தார நஷ்­டங்கள் போன்­ற­வற்­றிக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக மீள் இணக்­கப்­பாடு உண்மை அறியும் ஆணைக்­குழு மனித  உரி­மைகள் மீறல்கள், போர்க் குற்ற விசா­ர­ணைகள் போன்­ற­வற்றை 1980ஆம் ஆண்­டு­க­ளி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும்.

தேசிய காங்­கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சி­னைகள் குறித்து தீர்­மா­னங்­களை நிறைவேற்றி யுள்ளமையை வைத்துக் கொண்டு அக்கட்சி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் அதீத அக்கறை கொண்டுள்ளதென்ற தீர்­மா­னத்­திற்கு வரவும் முடி­யாது.

கடந்த மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பல குரோத நட­வ­டிக்­கை­களை பௌத்த இன­வாத அமைப்­புக்கள் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­முறைப்­ப­டுத்­திய போது ஏனைய முஸ்லிம் கட்­சி­களைப் போன்று தேசிய காங்­கி­ரஸும் மௌனமாகவே இருந்தது.

இன்று முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­வாறு தேசிய காங்­கிரஸின் மாநாட்டில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக உள்ள முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­களும் முஸ்­லிம்கள் எதிர்­கொண்டு வரும் பிரச்­சி­னை­க­ளு­ககு அர­சியல் அமைப்பு ரீதி­யாக தீர்­வுகள் குறித்து பேசு­வ­தற்கு தயக்கம் காட்டிக் கொண்­டி­ருக்கும் நிலையில், தேசிய காங்­கிரஸ் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வேண்டி தீர்­மா­னங்­களை  எடுத்­துள்­ளமை பாராட்­டுக்­கு­ரி­யது.

இலங்கை முஸ்­லிம்கள் மொத்த சனத் தொகையில் மூன்­றா­வது இடத்தில் உள்­ளார்கள். ஆகவே அவர்­களின் பிரச்­சி­னை­களைப் பற்றி அச்­ச­மூ­கத்தை பிர­தி­ப­லித்துக் கொண்­டி­ருக்கும் அர­சியல் கட்­சிகள் பேசு­வது அவ­சி­ய­மாகும். அர­சாங்கம் தரும் தீர்­வு­களை தலையை ஆட்டிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடி­யாது.

ஆதலால், முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­சை­களை நிறை­வேற்றக் கூடிய வகையில் சட்ட ஒழுங்­குகள் செய்­யப்­பட வேண்டும். இதற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பேச வேண்டும்.

அது­வல்­லாது, அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் கூட்டுப் பொறுப்பை பேண வேண்­டு­மென்று தெரி­வித்­துக கொண்­டி­ருக்க முடி­யாது. அமைச்­ச­ர­வையின் கூட்டுப் பொறுப்பை பேண வேண்­டு­மாயின் முஸ்லிம் சமூகத்திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இடம்­பெறக் கூடாது.முஸ்­லிம்­க­ளுக்கு அநியாயம் நடக்கும் போது அமைச்­ச­ர­வையின் கூட்டுப் பொறுப்பை பேண வேண்­டு­மென்­ப­தற்­காக முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­சை­களை குழி தோண்­டிப புதைக்க முடி­யாது.

முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தற்கு தயா­ரற்ற அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­தை விடவும் எதிர்க் கட்­சியில் இருப்­பது சிறந்­தது.

இதேவேளை, தேசிய காங்­கிரஸ் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் குறித்து தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ள­மையை வைத்துக் கொண்டு அக்­கட்சி முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­­களில் அதீத அக்­கறை கொண்­டுள்­ள­தென்ற தீர்­மா­னத்­திற்கு வரவும் முடி­யாது.

கடந்த மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பல குரோத நட­வ­டிக்­கை­களை பௌத்த இன­வாத அமைப்­புக்கள் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­மு­றைப்­ப­டுத்­திய போது ஏனைய முஸ்லிம் கட்­சி­களைப் போன்று தேசிய காங்­கி­ரஸும் மௌன­மா­கவே இருந்­தது. இன்று தேசிய காங்­கிரஸ் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் பற்றி பேசு­கின்­ற­தென்றால் அக்­கட்சி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பதும் ஒரு கார­ண­மாகும்.

ஆகவே, முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தின் பங்­காளி என்றால் ஒரு வகை­யான கொள்­கையும், எதிர்க் கட்சி என்றால் ஒரு வகை­யான கொள்­கை­யு­டனும் செயற்­பட முடி­யாது. எந்தத் தரப்பில் இருந்­தாலும் கொள்கை சரி­யாக இருக்க வேண்டும். முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்ற அந்­தஸ்­துடன் பிழை­யான வழியில் சென்று கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் கட்­சி­களின் பொறுப்­பற்ற நட­வ­டிக்­கை­களும், கொள்­கை­களும் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்­கி­விடும்.

இதே வேளை, தேசிய காங்­கி­ரஸின் தலைவர் அதா­வுல்லா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால                               சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­படப் போகின்றார் என்று கதைகள் தெரி­விக்­கப்­பட்­டாலும், அவர்  இன்னும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் சால்வை­யில்தான் தொங்கிக் கொண்­டி­ருக்­கின்றார் என்று தெரிகின்றது.

தேசிய காங்­கி­ரஸின் தேசிய மாநாட்டில் விசேட சொற்­பொ­ழி­வாற்­றிய அதா­வுல்லாஹ் நல்­லாட்சி வேண்டி வாக்­க­ளித்த மக்கள் நல்­லாட்­சியின் நன்­மைகள் கிட்­ட­வில்லை என்று வீதியில் இறங்கிப் போராட்­டங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

விவ­சா­யி­க­ளுக்கு உர­மா­னி­ய­மில்லை. நெல்­லுக்கு விலை­யில்லை. அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு ரூபா 10 ஆயிரம் சம்­பள அதி­க­ரிப்பு என்ற போர்­வையில் ரூபா 30 ஆயிரம் பெறு­ம­தி­யான சுமைகள், அபி­வி­ருத்­திகள் முடங்கிப் போயுள்­ளன என குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்துப் பேசி­யுள்ளார். இதன் மூல­மாக அவர் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அணி­யி­ல்தான் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கின்றார்.

இன்­றைய அர­சாங்­கத்தில் இணையக் கூடிய சாத்­தி­யங்கள் இருக்­கு­மாயின் கடந்த காலங்­களைப் போன்று அர­சாங்­கத்தை விமர்­சனம் செய்­யா­தி­ருந்­தி­ருப்பார்.

அர­சாங்­கத்தை விமர்­சனம் செய்­வ­தை வைத்துப் பார்க்கும் போது மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ மீண்டும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றுவார் என்ற நம்­பி­கை­கையில் அதா­வுல்லாஹ் இருக்­கின்­றாரோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது. அவர் முன் வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் உண்மை என்­றாலும் ஆளுங் கட்­சியில் இருந்­தி­ருந்தால் அவர் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைக்­க­மாட்டார் என்று கொள்ளும்படி­யா­கவே அவரின் கடந்த கால நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன.

இதே வேளை, அதா­வுல்லாஹ் முஸ்லிம் காங்­கி­ரஸின் நட­வ­டிக்­கை­க­ளையும் சாடிப் பேசினார். முஸ்லிம் காங்­கிரஸ் தேசிய மாநாட்டில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­ற­வில்லை.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு களம் அமைத்துக் கொடுத்­துள்­ள­தென்றும் தெரி­வித்­துள்ளார்.
கடந்த பொதுத் தேர்­தலின் தோல்­வியில் துவண்டு கிடந்த அதா­வுல்லாஹ் மீண்டும் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளமை முஸ்லிம் காங்­கிரஸ் அடைந்து கொண்ட ஆறு­தல்­க­ளுக்கு தடை­யாக அமையும்.

மேலும், தேசிய காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்­களை தமது பக்­கத்­திற்கு இழுத்துக் கொள்­வ­தற்கு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எடுத்துக் கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தேசிய காங்­கி­ரஸின் அர­சியல் நட­வ­டிக்­கைகளுக்கும் தடை­களை ஏற்­டுத்­து­வ­தா­கவே இருக்கும்.

ஆயினும், தேசிய காங்­கி­ரஸின் வளர்ச்சி என்­பது அக்­கட்சி அர­சாங்­கத்தில் ஆளுந் தரப்­பாக இருந்தால் மாத்­தி­ரமே சாத்­தி­ய­மாகும். தேசிய காங்­கிரஸ் எதிர்க்­கட்சி அர­சி­ய­லுக்கு பழக்­கப்­பட்­ட­தல்ல. ஏனைய இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வி­க­ளுடன் அதி­கா­ரத்தில் இருக்கும் நிலையில் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரைக் கூட கொண்­டி­ருக்­காத தேசிய காங்­கி­ரஸால் தம்மை வளர்த்துக் கொள்­வ­தென்­பது கடின பணி­யா­கவே அமையும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தேசிய காங்­கிரஸ் அதி­கா­ர­மில்­லாத இன்­றை­ய ­நி­லையில் தம்மை வளர்த்துக் கொள்­வ­தற்கு இருக்­கின்ற ஒரே­யொரு சந்­தர்ப்­பம்தான் புதிய அர­சியல் அமைப்பில் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு முன் வைக்கப்படும் தீர்வுகளாகும். முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வேண்டி பேசாது மௌனமாக இருப்பதனால் முஸ்லிம்கள் பலத்த அதிருப்தியுடன் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் உள்ளார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி அரசாங்கத்துடன் இடித்துரைத்துப் பேசுவதற்கு அரசாங்கத்தில் பங்காளியாக உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் தைரியமிழந்து நிற்கும் நிலையில் முஸ்லிம்களின மனக்கிடக்கை சரியாகப் புரிந்து கொண்டு தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ் நடவடிக்கைகளை எடுப்பாராயின், அதில் உண்மை இருக்குமாயின் தேசிய காங்கிரஸ் வளர்ச்சியடைவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் தேசிய காங்கிரஸிற்கு சாதக நிலையை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. தேசிய காங்கிரஸ் மற்றும் சில அரசியல் பிரமுகர்களும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

Related posts

“பால் நிறைந்த தேசம்” பரிசளிப்பு நிகழ்வு; பிரதம அதிதியாக ஜனாதிபதி

wpengine

காசைப் பெற்றுக்கொண்டு அனுமதி தந்தது முஸ்லிம் காங்கிரஸ் – ஒப்பந்தமும் உண்டு தயா குற்றச்சாட்டு

wpengine

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

wpengine