பிரதான செய்திகள்

மன்னாரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை! கவனம் செலுத்தாத நகர சபை,பிரதேச சபைகள்

மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கால் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரவைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில், மன்னார் தீவுக்கு வெளியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களின் மாடுகள் மற்றும் எருமை மாடுகள் அதிகலவில் கூட்டம் கூட்டமாக மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனவே, உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் பிரதான பாலத்தில் கால் நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor

ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் :தவறு செய்கிறோம்

wpengine

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

wpengine