சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவருடன் இந்த வழக்கில் பிரதவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சந்கே நபர்களும் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.