பிரதான செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மைத்திரிக்கு சீட்டுகொடுத்த மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று அதற்கான வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.


இதன்படி இன்றைய தினம் பொதுஜன முன்னணியின் வேட்பு மனுவில் பல உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.


எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் கையெழுத்திட்டிருந்தார்.


தொடர்ந்து வேட்பு மனுவில் கையெழுத்திடுவதற்கான செயற்பாடு அலரிமாளிகையில் இடம்பெற்றிருந்தது.


இதன்படி பிரிந்து சென்று போட்டியிடுவதற்கான பேச்சுக்களை அண்மைக்காலமாக நடத்தியிருந்த மற்றும் உவமை கதைகளினால் பகிரங்க மேடைகளில் ராஜபக்சவினரை விமர்சித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.


பொதுஜன முன்னணியின் கடும் எதிர்ப்புக்களை மீறியும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவருக்கான வேட்புமனு சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய இன்றைய தினம் முன்னாள் மைத்திரிபால சிறிசேன, பொதஜன முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.


தொடர்ந்து முன்னாள் சபாநாயகரான சமல் ராஜபக்ச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல, காஞ்சன விஜேசேகர, விதுர விக்ரமநாயக்க, சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, காமினி லொக்குகே, நிமல் லன்ஸா, பியல் நிஸாந்த உள்ளிட்ட பல உறுப்பினர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

Related posts

சீனாவின் உரம் இலங்கைக்கு மரண அடியாக மாறும்-கலாநிதி தயான் ஜயதிலக

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.

wpengine

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

wpengine