பிரதான செய்திகள்

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை குறித்து சீனா செல்லும் அமைச்சர் அலி சப்ரி!

கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இருதரப்பு விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள் நிலையில் இந்த விஜயத்தின் போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேடமாக பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணிலின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கினார் ஸ்ரீ ரங்கா!

Editor

வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை

wpengine

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலை

wpengine