பிரதான செய்திகள்

கடன் அட்டைக்கான வட்டி குறைக்க வேண்டும் ஜனாதிபதி உத்தரவு

கடன் அட்டைக்கான வட்டியை 15 வீதம் வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.


எனினும் அவற்றினை கருத்திற்கொள்ளாத பல வங்கிகள் இன்னமும் 28 வீத வட்டியை அறிவிடுவதாக தகவல் வெளியாகியுள்து.
இதன் காரணமாக இலங்கை கடன் அட்டைகள் பயன்படுத்தும் பல லட்சம் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


சில வங்கிகளில் சாதாரண வங்கி கணக்குகளுக்காக வட்டி வீதத்தை 3, 4 வீதம் காணப்பட்டாலும் கடன் அட்டை மூலம் சம்பாதிக்கும் இலாபம் பாரிய அதிகரிப்பு என குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் பலவற்றை வங்கிகளினால் செயற்படுத்தாத நிலையில் வங்கி பிரதானிகள் ஜனாதிபதியின் விமர்சனத்திற்குள்ளாகுகின்றனர்.


வங்கிகளினால் நடத்தி செல்லப்படுகின்ற நிதி நிறுவனங்கள் தங்கள் ஆலோசனைகளுக்கமைய செயற்படாத வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அவ்வாறான வங்கிகளின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கிக்கு அனுமதி உள்ள போதிலும் மத்திய வங்கி அவ்வாறான விடயங்கள் தொடர்பில் செயற்படுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.


இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஒரு தொகை ஆயுதம் மீட்பு

wpengine

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார்!

Editor

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்

wpengine