பிரதான செய்திகள்

கடந்த ஆண்டில் மாத்திரம் 9 இலட்சத்திற்கும் அதிக கடவுச்சீட்டுகள் விநியோகம்!

2022 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 11 ஆயிரத்து 689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கையை வெளியிட்டு, கடந்த 5 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் 2022 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட 2022 ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 138 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 18 ஆயிரத்து 66 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 11 இலட்சத்து 24 ஆயிரத்து 022 இலங்கையர்களும் 8 இலட்சத்து 64 நான்காயிரத்து 648 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ரஷ்யாவுக்கு ஆதரவாக 16000 ஆயிரம் சிரியா படை உக்ரேனில்

wpengine

இனவாதம் பேசித்தெரியும் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்.

wpengine

பிரபல ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களுடைய மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

wpengine