பிரதான செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2,438 நிலையங்களில் மொத்தம் 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக 29 சிறப்பு மையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மு.காவின் இயலாமையை வெளிப்படுத்தும் ஹனீபா மதனியின் ஒரு மடல்

wpengine

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விட்டு! 30வயது பெண் தற்கொலை

wpengine

தேர்தல் தொடர்பில் இதுவரை 398 முறைப்பாடுகள், 30 வேட்பாளர்கள் கைது.

Maash