பிரதான செய்திகள்

“ஒற்றுமையான பயணத்துக்கு உறுதிபூணுவோம்’ முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

இஸ்லாமிய புது வருடத்தில் புது சிந்தனைடன் முன்னோக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முஸ்லிம்கள் அனைவரும் உறுதி பூணுவோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது முஹர்ரம் புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை ஹிஜ்ரி 1438 இஸ்லாமிய புது வருட பிறப்பை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:

இஸ்லாமிய புது வருடம் முஹர்ரம் மாதத்துடன் ஆரம்பமாகின்றது. முஸ்லிம்கள் என்ற ரீதியில் இதனை நாங்கள் சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும்.

அது மாத்திரமல்லாது, கடந்த வருடத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுவதுடன் எதிர்வரும் வருடம் சிறப்பான முறையில் அமையவும் பிரார்த்திக்க வேண்டும்.

முஸ்லிம்கள் எப்போதும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பு செலுத்தியுள்ளனர். அந்தவகையில் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காகவும்  அபிவிருத்திக்காவும் இப்புனித மாததில் பிரார்த்தனை செய்வோம்.

விஷமிகளின் சூழ்ச்சிகளை விட்டும் நம் நாட்டு மக்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பை தேடுவதற்கும், உலக முஸ்லிம் நாடுகளின் சகோதரத்துவ மனப்பான்மையை வளர்த்து ஒற்றுமையுடன் போராட வழிவகுக்க வழிசெய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்தும், இப்புனித மாதத்தின் நாட்களில் நோன்பு நோற்று பிரார்த்திப்போம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிலோன் முஸ்லிம் இணையத்தள செய்தி ஊடக அலுவலகம் மீது சிறு ஒயில்வீச்சு

wpengine

5லச்சம் மெட்ரிக் தொன் இறக்குமதி! அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பு அமைச்சர் றிஷாட்

wpengine

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும்

wpengine