சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் இன்று புதன்கிழமை விசர் நாய் ஒன்று 7 பேரைக் கண்டித்துள்ளது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களே விசர் நாய் கடிக்குள்ளாகி உள்ளனர்.
இதேவேளை குறித்த விசர் நாயை அப்பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் அடித்துக் கொன்றுள்ளார்கள்.
தற்போது குறித்த நாயின் தலைப் பகுதி அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் இன்றைய தினம் அப் பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg