பிரதான செய்திகள்

ஒரே தடையில் 8 தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும்! ஒருவர் கைது

எட்டு தொலைபேசி அழைப்புகளை ஒரே தடையில் எடுக்கக் கூடிய, 8 சிம் அட்டைகளை பயன்படுத்தும் வகையிலான தொடர்புசாதன கருதி, ரவுட்டர், இரண்டு கினிஸ் கத்திகளுடன் நிட்டம்புவ கல்-எலிய பிரதேசத்தில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புகளை எடுக்கக் கூடியவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்புசாதன கருவி இலங்கையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கருவி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெயங்கொடை பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட போது, வேறு ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த இரண்டு பெண்களும், இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணைகளை அடுத்த மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர், கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு வாள்களை வழங்கிய சந்தேக நபரின் மனைவி என்ற் தகவலும் கிடைத்துள்ளது.

பள்ளிவாசல்களுக்கு வாள்களை வழங்கிய இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கல்-எலியவில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைப்பற்றிய பொருட்களுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் சவால்

wpengine

கிளிநொச்சி வெள்ளநிவாரண சர்ச்சை சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

wpengine

சதொச மீதான வழக்கு! அமைச்சர் ஜோன்ஸ்டன்,மொஹமட் சாகீர் விடுவிப்பு

wpengine