பிரதான செய்திகள்

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

யாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இன்று இரு பாடசாலைகளுக்கும், யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்தி சங்கத்திற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பல் ஊடக எயிறீ (Multimedia Projector) மற்றும் ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்கள் கல்லூரியின் அதிபர் எம்.ஜி சம்பந்தன் அவர்களிடமும்,
யாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திற்கு நிழல் பிரதி இயந்திரம் (Photocopy Machine) வித்தியாலயத்தின் அதிபரிடமும்,
யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்தி சங்கத்திற்கு அலுமாரி மற்றும் ஒரு தொகுதி கதிரைகள் சங்கத்தின் தலைவரிடமும் பாராளுமன்ற உறுப்பினரால் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஹக்கீமிடமிருந்து மீட்பதற்கான செயல் திட்டம்தான்! கிழக்கின் எழுர்ச்சி

wpengine

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும் : பௌத்த தர்மமே கோலோச்சும் – அமைச்சர் ராஜபக்ஷ

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு செயலமர்வு

wpengine