பிரதான செய்திகள்

ஒரு சந்தையினை இரு தடவை திறந்த ஹாபீஸ் ,தயா

கடந்த ஒருவருட காலமாக பயன்பத்தப்பட்டுவந்த அம்பாறை தமன பிரதேச சபைக்கு சொந்தமான பொது சந்தை இன்று இரண்டு தடவைகள் திறந்து வைக்கப்பட்டது.


அமைச்சர் தயா கமகே மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸிர் அகமட் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து குறித்த பொது சந்தையை திறந்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது குறித்த பொது சந்தை 3 அரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், சந்தையானது வர்த்தகர்களால் கடந்த ஒரு வருடகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களால் அதனை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் சந்தையை திறந்து வைக்கும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு வந்த அமைச்சர் தயாகமகே மற்றும் அவரது மனைவி பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோர்சந்தையை திறந்துவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.141608_6

இதன்போது குறித்த நிகழ்வின் அமைதியின்மை ஏற்பட்ட அதேவேளை, பின்னர் அங்கு வருகை தந்த முதலமைச்சர் நஸீர் அகமட் மீண்டும் திறந்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.141608_2

Related posts

நாட்டில் மின்சார விநியோகத்தில் தடை மேற்கொள்ளப்படமாட்டாது.

wpengine

ஊடகவியலாளர்கள் சம்மந்தமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முறைப்பாடு! சுத்தம் செய்யும் ஜனாதிபதி

wpengine

இந்தியா உதவி! வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க

wpengine