பிரதான செய்திகள்

ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!

(ஊடகப்பிரிவு)

பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற அரிசிக்கான இறக்குமதி வரி கிலோவொன்றிற்கு 25 சதம் விதிக்கப்படுகின்ற போதிலும் பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி மட்டும் கிலோவொன்றிற்கு 50 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக உள்ளமை எமக்கு கவலையை தருகின்றது என பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம தலைமை நிறைவேற்று அதிகாரி ரபீக் சுலேமான் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடனான இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரித்தார்.

அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம தலைமை நிறைவேற்று அதிகாரி ரபீக் சுலேமான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் அரிசி ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி நிறுத்துகின்றன. உலகின் ஒரே நாடான பாகிஸ்தான் மட்டுமே அதன் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதில்லை. நாங்கள் பாக்கிஸ்தானிய தனியார் துறையினர். எங்கள் நாட்டின் மொத்த அரிசி ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தி வருகின்ற போதிலும் எங்கள் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. 1996 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் அரிசியினை அரச நிறுவனமான கூட்டுறவு மொத்த விற்பனை மற்றும் ஏனைய தனியார் துறையினருக்கும் வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஏனைய அரிசி கிலோ ஒன்றிற்கு 25 சதம் வரி விதிக்கப்படுகிறது. என்றாலும் பாகிஸ்தானிலிருந்து வரும் பாஸ்மதி அரிசி அல்லாத அரிசிக்கு கிலோவொன்றிற்கு 50 ரூபா வரி விதிக்கப்படுகிறது இது ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக உள்ளது எமக்கு கவலையை தருகின்றது.

பாஸ்மதி அரிசி அல்லாத எங்கள் மீது விதிக்கப்பட்ட இந்த உயர்ந்த இறக்குமதி வரிகளை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் குறைக்கவும் நாங்கள் உங்களை அழைக்கிறோம். எமது Pமு 386 மற்றும் ஊ9 ரக பாஸ்மதி; அல்லாத அரிசி வகைகள் இலங்கையில் தரையிறங்கியுள்ளன, ஆனால் அவை ஒருவேளை ‘பஸ்மதி’ எனவும் தவறுதலாக வகைப்படுத்தப்படுகின்றன, அதே சமயம் பாஸ்மதி கிலோவொன்றிற்கு 50 ரூபாய்க்கு வரி விதிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கைக்கான பாஸ்மதி இறக்குமதிக்கான வரிவிலக்கு கோட்டாவினை அதிகரிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். சாத்தியமானால் இரட்;டிப்பாக 12000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் விரும்புகின்றோம்.

வர்த்தக திணைக்களத்தின் தகவலின் படி பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்ககைக்கு இணங்க 2007 ஆம் ஆண்டு இரு நாடுகளினது முதலாவது அமைச்சர்களின் கூட்டத்தில் பாஸ்மதி அரிசி இறக்குமதி தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. வருடா வருடம் 6000 மெற்றிக்தொன் பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்யவதற்கு இணக்கம் காணப்பட்டது என சுலேமான் குறிப்பிட்டார்.

பாக்கிஸ்தான் அரிசி வகைகள் நீண்ட காலமாக இலங்கை சந்தையில் விற்கப்பட்டு வந்தன. மேலும் பல எமது நுகர்வோர்கள் பாக்கிஸ்தான் அரிசி வகைகளை நன்கு அறிந்தும் பழக்கப்பட்டும் உள்ளனர். இறக்குமதி வரி மற்றும் ஒதுக்கீட்டு விவகாரங்கள் பற்றிய உங்கள் கோரிக்கை நியாயமானதாகவே தோன்றுகிறது.

இருதரப்பு சுங்கவரி ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்பன பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்ககைக்கு விளைவை ஏற்படுத்தமா என அச்சம் தோன்றுகின்றது என அமைச்சர் பதியுதீன் கூறினார.

Related posts

70 வருடங்களின் பின்பு திருமண சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு இந்துக்களுக்கு அங்கிகாரம்

wpengine

பேஸ்புக்கில் சிவப்பு எச்சரிக்கை இல்லை

wpengine

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்கும் மகிந்தவும்,நம்பிக்கைக்குத் துரோகமிழைத்த மைத்ரியும்!

wpengine