அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடை அமுல் . !

நாட்டில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் திங்கட்கிழமை (10) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட திடீர் மின்தடையையடுத்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளன.

குறித்த இயந்திரங்களை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு சுமார் 4 நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த இயந்திரங்களின் செயலிழப்பினால் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மையை முகாமை செய்து, மின்சக்தியை பங்கீடு செய்யும் நோக்கில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இந்த சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

விஜயதாஷ ராஜபக்ஷ விசாரிக்கப்படுவாரா? பொதுபல சேனா விடயத்தில் நீதியை நிலை நாட்ட தவறியுள்ளது.

wpengine

உக்ரைன் ஆக்கிரமிப்பு, உலக பொலிஸுக்கு எச்சரிக்கை?

wpengine

எவரையும் உடல், உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை – பிரதமர் (விடியோ)

wpengine