பிரதான செய்திகள்

ஒட்டுசுட்டான் முன்பள்ளிக்கு மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் வாத்தியக்கருவி அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அன்பழகன் முன்பள்ளியில் பயிலும் மாணவச் சிறார்களின் பயிற்சிக்கும், பயன்பாட்டிற்குமாக, பாண்ட் வாத்தியக் கருவிகளின் தொகுதியினை நேற்று (28.07.2017)அன்பளிப்பு செய்துள்ளார்.

மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகையின் மூலம் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் புளொட் உறுப்பினர் க.சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் கனக தவராஜா மாஸ்டர், துணுக்காய் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Related posts

பஷீரின் நீக்கம் சரியானதா?

wpengine

புதிய விமானப்படைத் தளபதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

Editor

பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துகொடுத்த முன்னால் அமைச்சர்

wpengine