பிரதான செய்திகள்

ஒட்டமாவடி பிரதேச சபை! அமீர் அலி அரங்கில் பராமுகம்

அமீர் அலி விளையாட்டு அரங்கம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக பிரதியமைச்சர் அமீர் அலி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் காணப்படும் விளையாட்டு அரங்கை அலங்கோலமாகவும் வைத்திருக்கின்றது. அத்தோடு உடைந்த நிலையிலே விளையாட்டு அரங்கு காணப்படுவது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கின்றது.
இங்குள்ள தளபாடங்களுக்கு வாய் இருந்தால் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம், இதனை வடிவமைப்பதற்கு எத்தனை இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம் என்ற வரலாறுகளை கூறும்.
கல்குடாப் பிரதேசத்தில் இருக்கின்ற விளையாட்டுக் கழங்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரம் தான் விளையாட்டு மைதானத்தை தேசியத்திலே சிறந்த விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கான முனைப்புக்களை செய்ய முடியும்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் இருக்கின்ற அதிகாரிகள் இம்மைதான விடயம் தொடர்பாக பாராமுகமாக இருந்திருக்கின்றார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

Related posts

மீதியான 208 உள்ளூராட்சி தேர்தல்! 4ஆம் திகதி

wpengine

மன்னார் செயலக கட்டடம் திறந்து வைப்பு! பிரதமருக்கு நினைவு சின்னம் வழங்கிய றிஷாட்

wpengine

25 வயது 22 வயதுடைய காதல் ஜோடியின் சடலம் மீட்பு

wpengine