பிரதான செய்திகள்

ஒட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பரிசோதனை! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

(அனா)
ஒட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்றுமுன் தினம் (12.11.2016) சனிக்கிழமை வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதனை செய்யப்பட்ட போது எட்டு உணவகங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.

உணவகங்களில் துப்பரவு இன்மை காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து (12.11.2016) ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகள் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனையை அடுத்து எட்டு உணவகங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் அவ் உணவகங்களில் பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட உணவகங்களுக்கு ஒரு வார காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் தங்களது உணவகங்களில் உள்ள குறைகளை திருத்தி அமைக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் எச்சரிக்ப்பட்டுள்ளதாகவும் அதனை அவர்கள் திருத்தி அமைக்காதவிடத்து அதன் உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.unnamed-2

Related posts

மதம்,இனம் அடிப்படையாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

wpengine

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைக்கும் ரணில்

wpengine

தற்கொலை! ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

wpengine