பிரதான செய்திகள்

ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் பைசல் முஸ்தபா

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் திகதி நீடிக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான பிரச்சினை காரணமாகவே வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் தினமும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டால், குறித்த வர்த்தமானியை அந்த தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

wpengine

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசியதற்காக வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு கௌரவ பட்டம்

wpengine

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

wpengine