பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராறிஸ்கான் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராககே.ஆர்.றிஸ்கான் முகம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நியமனம் திங்கட்கிழமை (08) கட்சி தலைமையகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க
ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், இந்நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.


அத்துடன், இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமேல் மாகாணத்தில் வேகமாகப் பரவும் தோல் நோய்!

Editor

முஸ்லிம் எயீட் அனுசரனையுடன் நிவாரணப் பொதிவழங்கலுடன் மருத்துவ முகாம்

wpengine

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

wpengine