பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் உத்தரவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் குருணாகலில் நடத்தப்பட உள்ள பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டாம்.

என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குருணாகலில் நடைபெறும் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் உத்தரவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் இதனால், குருணாகலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வியாழந்திரன்,பிள்ளையான் குழுக்களுக்கிடையில் மோதல்

wpengine

அதிகரிக்கப்படும் கொடுப்பனவு: 5ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக.

Maash

சோனிகள் தொப்பி பிரட்டிகள் ரவூப் ஹக்கீம்

wpengine