பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சிக்கு எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லையென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹ பிரதேசத்தில் நேற்றுமுன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடையில் தொடர்புகள் இருப்பதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியனர் என்ன செய்கின்றனர் என்பதும், என்ன செய்தனர் என்பதும், ஜேவிபியினருக்கு என்ன செய்தனர் என்பதும் ஜே.வி.பி நன்கு அறியும்.எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடனான தொடர்பு என்ன என்பது குறித்தும், ஜே.வி.பி நன்கு அறியும்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடனான ஜேவிபியின் தொடர்பு குறித்து எவரும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

மர்ஹூம் அஷ்ரப் மரணம்! திடுக்கிடும் சில உண்மைகள்

wpengine