பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், மக்கள் தெரிவு செய்யும் நபரையே பிரதமராக நியமிப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

பலமான நபர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் சஜித் தரப்பிற்கும், ரணில் தரப்பிற்கும் இடையில் முரண்பாடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கம்மன்பிலவுக்கு முஜிப் சவால்! இனவாதத்திற்கு பணம் கொடுத்தவர் மஹிந்த

wpengine

அடுத்தடுத்து இரு வெளிநாட்டு பயணங்களை மேட்கொள்ளும் ரணில் .

Maash

வவுனியா பிரதேச செயலக சிறந்த பாடகர் தெரிவு

wpengine