பிரதான செய்திகள்

ஐ.நா.வின் அறிக்கையாளரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

(தமீம்)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்யை வெள்ளிக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது ஐ.நா. சபையின் நிலைமாறு கால நீதி தொடர்பான அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களுடைய கரிசனைகள், வகிபாகம் என்பன தொடர்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யுத்தத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்கள், வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் ஆகியன தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன் இது பற்றிய அறிக்கையொன்றையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீபிடம் கையளித்தார்.

இக்கந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸும் பங்குபற்றினார்.

Related posts

VPN பாவித்தோர் ஆபத்தான நிலையில்

wpengine

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine

கூகுள் மற்றும் பேஸ்புக் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

wpengine