உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐ.நா சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு!

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட காலத்திற்கு இலங்கையை ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை நீக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், பெல்ஜியம், பொலிவியா, கொலம்பியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருடம் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளாகும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

Editor

முசலி பிரதேச செயலாளர் விபத்து! மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

வடமாகாண இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

wpengine