பிரதான செய்திகள்

ஐ.தே.க எதிராக மைத்திரி கருத்து! இரவு பலரை சந்தித்தார்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்குள் நிலவும் பிரச்சினைகளை தெளிவுபடுத்திக்கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாகும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

இதேவேளை, அண்மை காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டு வருவதானால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

wpengine

சமஷ்டி தீர்மானம் சம்மந்தனிடம் கையளிக்கப்படும்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine