பிரதான செய்திகள்

ஏறாவூர் விகாரைக்கு நஷ்டஈடு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

வன்செயல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஏறாவூர்  விகாரைக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுத்தார்.

யுத்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் விசேட திட்டமொன்றுக்கு அமைய  நஷ்ட ஈடு வழங்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த விகாரைக்கும் இரண்டரை இலட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து இதற்கான நிதியை ஏறாhவூர் புனிதலாராமய விகாராதிபதி அலுத்தர தம்மரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அலுத்தர தம்மரத்ன தேரர்,

யுத்தத்தினால் ஏறாவூர் புனிதலாராமய விகாரை மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டது. இது குறித்து இன்னாள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த விடயம் தொடர்பில் பேசியதை அடுத்து முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.

Related posts

விக்கியின் விசாரணை குழுவில் மோசடி,சிறைவாசம்

wpengine

சிலாபம் பகுதியில் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக கட்டணம்

wpengine

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine