பிரதான செய்திகள்

எழுத்துப் பிழையாம் உறுப்பினர்கள் பெயர் விபரம் வெளியிடவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானியில் அறிவிக்கும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பெயர் விபரங்களை வெளியிடும் நடவடிக்கை இன்னும் சில தினங்கள் காலம் தாழ்த்தப்படலாம் என அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான 8, 600 உறுப்பினர்களின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்படவிருந்தது.

அச்சிடல், எழுத்துப் பிழைகளை பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதனால் பெயர்களை வெளியிடும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பெயர்களை சரிபார்க்குமாறு கோரி ஆவணங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிழைகள் திருத்தப்பட்டதன் பின்னர் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆரம்பமாக உள்ளது.

Related posts

மக்களின் அதிருப்திக்கு உள்ளான உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படாது

wpengine

சிலாவத்துறை,புத்தளம் வைத்தியசாலை பிரச்சினைகளை தீர்த்து வைக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை தொடர்பான பார்வை

wpengine

மன்னாரில் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

wpengine