செய்திகள்பிரதான செய்திகள்

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை.!

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை

wpengine

மஹிந்த அணியில் பிரபல கிரிக்கெட் வீரர்

wpengine

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை நீதிமன்றத்திலே சந்திப்போம்

wpengine