செய்திகள்பிராந்திய செய்தி

எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கம்????

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சியின் போது திறைசேரிக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மொத்தமாக 884 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்தக் கடனைத் தீர்க்கவே ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடனின் அரைவாசி இப்போது ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் செலுத்தப்பட்டதும், எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல் மாகாணத்தில் பயணிக்கும் பஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர நடவடிக்கை!

Editor

இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது – இனவாதத்தை தோற்கடிக்க முடியாவிடில் புதிய சட்டம்.

Maash

சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும்.

Maash