பிரதான செய்திகள்

எமது நற்பாசை ஒருபோதும் எமக்கான உரிமையை பெற்றுத் தராது.

(முகம்மத் அன்ஸார்)

முஸ்லிம் அரசியலில் உரிமை அபிலாஷை போராட்டம் என்பதெல்லாம் பதவியையும் அதிகாரத்தையும் அடைந்த கொள்வதற்காக மக்கள் மன்றில் முன்வைக்கப்படும் மூலதன வார்த்தைகள்.

முஸ்லிம்களின் உரிமை போராட்ட அரசியல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரையும் சமுகத்தின் உரிமை பற்றித்தான் பேசுகிறார்களே தவிர எமக்கான உரிமைகள் பெறப்பட்டதா என்பது கேள்விக்குறிதான்.

  எமது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரமும் பதவியும் மக்களின் உரிமைகளை பெறுவதை விட ஆட்சி அமைக்கும் அரசுடன் தேன்நிலவு நடந்தி பதவியையும் பட்டத்தையும் பெற்று குறுநில மன்னர்களாக வளம்  வருகின்றவர்களே அதிகம்

தனது சமுகத்தின் உரிமைகளை பெற வேண்டிய விடயத்தில் இவர்கள் மெளனம் காட்கவில்லை அவர்களை மெளனமாக இருக்க வேண்டிய நிலையில் அவர்களின் பதவியும் சுயநலமும் இருக்கின்றது.  அதனால் சமுகத்தின் பிரச்சனையை விட அவர்களின் பதவியும் சுயநல வாழ்க்கையும்தான் முக்கியம் இந்த அரசியல்வாதிகளின் பரிபாசையில் உரிமை என்பது கட்டிடங்களை கட்டி அதற்கு தங்களது பெயரை சூட்டுவது, வீதிகளை போட்டு திறப்பு விழா நடந்ததுவது வெளிநாட்டு தொன்டு நிறுவனங்களின் உதவியுடன் வேலைகளை செய்து அதில் தனது பெயரை பதிப்பது  இவ்வாறான தங்களது பதவியையும் பக்கட்டையும் பாதுகாத்துக் கொள்வதுதான் இவர்களின்  உரிமை அரசியல்.

ஆனால்  வாக்களித்த மக்கள் எதிர்பார்கின்ற உரிமை இதுவல்ல. என்பதை இன்னும் அவர்கள் புரியவுமில்லை. புரியவும் மாட்டார்கள்.

அதில் ஒன்றுதான் திட்டமிடப்பாடத தூரநோக்கற்ற அபிபிருத்தியால் இயற்கையின் அழிவாள் எங்களுடை நிலமும் எங்களின் வாழ்வாதாரமும் குடியிருப்புகளும் இழக்கப்படுகின்றது அதை உரிய முறையில் செயற்படுத்தி எங்களது மண்ணை காப்பாற்றித் தாருங்கள் என்றுதான் ஒலுவில் மக்கள் கேட்கின்றார்கள். இது அவர்களின் காதுகளையும் மனட்சாட்சியையும் தட்டிருக்கின்றது.

ஆனால் எமது மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான நிவாரணங்களையும் ஏனைய தேவைகளை கூட சரியான முறையில் பெற்றுக் கொடுத்தாதகவும் நம் இழப்புக்கு சமமான நஷ்டஈடுகள் கிடைத்ததாகவும் இதுவரை பெரிதாக சொல்லக்கூடிய அளவில் இல்லை.

ஆனால் ஒலுவில் விடயத்தில் அரசியல் வாதிகள் கண்களை திறக்காமல் இல்லை அவர்கள் திறந்துதான் இருக்கின்றார்கள். அது சமுக நலனுக்க காவில்லை மாறகா அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் செல்வாக்கு எனக்கா உனக்கா என்ற பலப்பரீட்சைக்காக.

ஆனால் அரச தலைவர்களுக் தெரியும் எதை கொடுத்து எதையும் பறிக்கலாம், எந்த நேரத்தில் வாய் மூடி மெளனியாக்கலாம். எவ்விடத்தில் இவர்களை பேச வைத்து மக்களை ஏமாற்றுலாம் என்றெல்லாம் தெரியும் இவர்களின் பலவீனம். அதை புரிந்த அரச தலைவர்கள்தான்  எமது மக்களின்  உரிமைக்குரல்களை அடக்குவதற்கு இந்த அரசியல்வாதிகளை பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறான முஸ்லிம் அரசியல் தலைமைகளைதான் அவர்களும் விரும்புகிறார்கள்.

இவ்வகையான அரசியல் வாதிகளால் வாக்களித்த மக்கள் அனுபவிக்கின்ற நன்மை விட இவர்கள் ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்கின்ற அரசுகள் பெறும் இலாபமே அதிகம்.

 எனவே மக்களாகிய நாம் சிந்தனை அறிவுரீதியான தூரநோக்கு கொண்ட ஜனநாயக செயற்பாடுகள் மூலமாகத்தான் எமது உரிமைக்கான குரலை எழுப்பி இவர்களின் கண்களை திறக்க வைக்கலாமே தவிர நாம் வாக்குப்போட்டு அனுப்பிய நம் பிரதிநிதி நமது உரிமையை பெற்றுத் தருவார் என்ற நப்பாசை ஒருபோதும் வெற்றியை தராது..

நாம் ஒவ்வெருவரும் மாறத வரையில் சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Related posts

வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் கைது

wpengine

அம்பாறை காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine