பிரதான செய்திகள்

எனது மாமா மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவில்லை! போலியான செய்தி நாமல்

கால்நடை படுகொலை தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் இயக்குநராக பணியாற்றும் தனது மாமா திலக் வீரசிங்கவுக்கு, மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.


கால்நடை படுகொலை தடையைத்தொடர்ந்து, வீரசிங்க இப்போது நாட்டிற்கு மாட்டிறைச்சி இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


கால்நடை படுகொலை தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம் என்று அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளன.


எனினும் இந்த கூற்றுக்களை மறுத்துள்ள நாமல் ராஜபக்ஷ, இது தனது குடும்பத்திற்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல் என்றும் தமது குடும்பத்தில் யாரும் இறைச்சி இறக்குமதியில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சிலர் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதைப் பார்க்கும்போது கவலையாக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


திலக் வீரசிங்க போலி செய்திகளால் குறிவைக்கப்படுகிறார், இது அரசியல் போட்டியைத் தவிர வேறில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related posts

கட்டுரைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

wpengine

30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும் வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர்.

wpengine

பிக்குகளை அடக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் மாநாயக்க தேரர்கள்

wpengine