பிரதான செய்திகள்

‘எனது கோழிகள் முட்டையிடவில்லை’ – புகாரளித்த விவசாயி!

புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது கோழிகள் முட்டையிடவில்லை என பொலிஸாரிடம்  புகார் அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா, புனேவைச் சேர்ந்த விவசாயியொருவர்  கோழிப்பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளதோடு, அப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு புதிய கோழித்தீவனமென்றினை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருவாரம் கடந்த நிலையிலும் கோழிகள் முட்டை இடவில்லை என்பதால் குறித்த தீவன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

எனினும், அந் நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் அளிக்கப்படாமையால்  இச்சம்பவம் குறித்து அவர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் கோழித்தீவனத்தை உண்ட பின், எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை உணர்ந்த பொலிஸார், அப்புகாரினை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு :அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine

தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்படும் .

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

wpengine