பிரதான செய்திகள்

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும்

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும். அதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்கு தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி நெருக்கடியின் காரணமாக மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாகவும் மூடப்பட்டுள்ளது.

நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவில்லை.

தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவை தற்போது எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Related posts

2 வாரங்களாக மூடப்பட்ட வவுனியா சிறைச்சாலை!

Editor

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சி

wpengine

மட்டு-பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகள் ஆரம்பம்.

wpengine