பிரதான செய்திகள்

எதிர்க்கட்சியில் இணைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்

(றியாஸ் ஆதம்)

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியபோது, மாகாண சபையில் ஆளும் கட்சி வரிசையில் இருந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார்.

மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவர், கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் இணைந்து செயற்பட்டார்.

கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அதிருப்தியுற்ற நிலையில் எதிர்க்கட்சிக்கு தாவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

Related posts

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

wpengine

எரிபொருள் பிரச்சினை! பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெயர் பலகை நீக்கம்

wpengine

வங்குரோத்து அரசியல்வாதிகளின் முலதனமான நகைகடை கொள்ளைகாரன் குவைதர்கான்

wpengine