பிரதான செய்திகள்

ஊரடங்கு தொடர்பில் புதிய திருத்தம்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா,களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை ஐந்து மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 24ஆம் திகதி இரவு எட்டு மணி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி காலை ஐந்து மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.


மேலும், 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் நிலைமை மோசமாகிவிடும் – விமல் எச்சரிக்கை

wpengine

சிலரின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகாசங்கத்தினர்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine