பிரதான செய்திகள்

ஊடகவியலாளரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன்

அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச சுயாதீன ஊடகவியலாளரான எஸ்.எம்.அறூஸ் என்பவரை பிரதேசசபை உறுப்பினர் ஆப்தீன் தாக்கியுள்ளார்.
இதற்கு முன்னதாகவும் ஊடகவியலாளர் தன்னை தாக்கியதாக தெரிவித்து குறித்த பிரதேசசபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், ஊடகவியலாளர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து இருவரும் சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக செய்திகளையும் ஊடகவியலாளர்களையும் இந்த ஆப்தீன் போன்றோர் அடக்கப்பார்க்கின்றார் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹக்கீம் ஒரு நாகரீகமான அரசியல் வாதி என்றால் தனது கீழ் மட்ட தொண்டர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்கு தாய் தந்தையர்கள் வளர்த்த வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர்களையே குற்றம் சொல்ல முடியும்.

அம்பாறை மாவட்டத்திலே அட்டாளைச்சேனையில் மட்டுமே அதிகமான சட்டவிரோத செயல்களில் ஹக்கீம் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அதாவுல்லா காங்கிரஸ் கட்சிக்காரர்களும் மோதிக் கொள்வார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். உள்ளூர்காரர்கள் மோதிக் கொள்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

குமாரியின் வாக்கு மூலம்! மாட்டிக்கொண்ட காதல் மன்னன் ரவூப் ஹக்கீம்

wpengine

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மன்னாரில் கறுப்புப்பட்டி போராட்டம்

wpengine

தாயே! பிள்ளைகளின் முதல் ஆசான் அ.இ.ம.கா. கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி

wpengine