பிரதான செய்திகள்

உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

சிறுபோக பயிர்ச்செய்கையாளர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை தட்டுப்பாடின்றி விரைவாக பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும்.

நாடு முழுவதிலும் உள்ள 217 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கான சிறப்பு எரிபொருள் விநியோகம் நடைபெறவுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் சிபாரிசுக் கடிதத்துடன் வரும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தாமதமின்றிப் பெற்றுக் கொள்ளவும் மேலதிக எரிபொருள் தேவைப்படுமிடத்து துரிதமாக அதனைப் பெற்றுக் கொள்ளவும் இதன் மூலம் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்  

Related posts

‘பேஸ்புக்’ தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு

wpengine

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine

பொதுபல சேன ஜனாதிபதி கவலை

wpengine