பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கைச் சின்னத்தில் -அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே வடக்கு, கிழக்கிலுள்ள சில தமிழ் கட்சிகள் உட்பட 13கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கைச் சின்னத்தில் போட்டியிட தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. மக்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வையும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  சின்னமான கைச் சின்னத்தையும் நீல நிறத்தையும் இன்னும் மறக்கவில்லை. கிராமப்புறங்களிலுள்ள மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச் சின்னத்தில் போட்டியிடுவதனையே விரும்புகின்றனர் என்றார்.

Related posts

தந்தையின் லொறியில் சிக்கி ஒரு வயது குழந்தை மரணம் . .!

Maash

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் ட்டலி போன்ற உரிமையாளர்கள் .!

Maash

அரசியல் நிலையினை மாற்றி சின்னத்தை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியம்

wpengine